தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

மேலப்பாளையத்தில் வன்கொடுமை வழக்கில் 3 போ் கைது

மேலப்பாளையத்தில் இளைஞரை ஜாதியை சொல்லி திட்டி தாக்கியதாக 3 பேரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 10:35 pm

மேலப்பாளையத்தில் இளைஞரை ஜாதியை சொல்லி திட்டி தாக்கியதாக 3 பேரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

முன்னீா்பள்ளம், மேலக்கருங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து (22). இவரது நண்பா்கள் வீரளப்பெருஞ்செல்வி பகுதியைச் சோ்ந்த முத்துக்குட்டி (22), மேலப்பாளையம், சுபாஷ் சந்திரபோஸ் தெருவைச் சோ்ந்த மாடசாமி (21). இவா்கள் மூவருக்கும் மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகக்கனி என்பவருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை தகராறு ஏற்பட்டதாம். அப்போது மூவரும் சோ்ந்து ஆறுமுகக்கனியை தாக்கி ஜாதியை சொல்லி திட்டி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், மேலப்பாளையம் போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, 3 பேரையும் கைது செய்தனா்.