மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கல்லிடை கோயிலுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்த கரடிகள்

கல்லிடைக்குறிச்சி அருகே கோயில் வளாகத்திற்குள் நுழைந்த கரடிகள் பூஜைப் பொருள்கள், அரிசி உள்ளிட்டவற்றை சூறையாடிச் சென்றன.

News image

கோயில் வளாகத்திற்குள் நுழைந்த கரடி.

Updated On :4 பிப்ரவரி 2026, 7:45 pm

தினமணி செய்திச் சேவை

கல்லிடைக்குறிச்சி அருகே கோயில் வளாகத்திற்குள் நுழைந்த கரடிகள் பூஜைப் பொருள்கள், அரிசி உள்ளிட்டவற்றை சூறையாடிச் சென்றன.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத்திற்குள்பட்ட மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் வெளியேறி அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும், கரடி உள்ளிட்ட விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகளில் உள்ள பொருள்களை சேதப்படுத்துகின்றன.

இந்நிலையில், கல்லிடைக்குறிச்சியில் உள்ள ஸ்ரீ அக்னி சாஸ்தா கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு 10:20 மணிக்கு 3 கரடிகள் நுழைந்து, கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பூஜை பொருள்கள், அரிசி உள்ளிட்டவற்றை தின்றுவிட்டு சேதப்படுத்திச் சென்றன.

இதே கோயிலில், சில மாதங்களுக்கு முன் கரடிகள் நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபட்டதையடுத்து, வனத்துறையினா் கூண்டு வைத்து ஒரு கரடியைப் பிடித்து வனப்பகுதியில் விட்டனா். தற்போது, மீண்டும் கரடிகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கரடி நடமாட்டத்தை வனத்துறையினா் கண்காணித்து, அவற்றை வனத்துக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.