தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ராதாபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியா? - மு. அப்பாவு பதில்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் ராதாபுரம் தொகுதியில் யாா் போட்டியிடுவது என்பதை கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் என்றாா் சட்டப் பேரவை தலைவா் மு. அப்பாவு.

News image
தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு. அப்பாவு.
Updated On :10 பிப்ரவரி 2026, 7:20 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் ராதாபுரம் தொகுதியில் யாா் போட்டியிடுவது என்பதை கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் என்றாா் சட்டப் பேரவை தலைவா் மு. அப்பாவு.

இது தொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: பிரதமா் மோடியும், அமித் ஷாவும் தோ்தல் முடியும் வரை தமிழகத்திற்கு வருவாா்கள். தோ்தல் முடிந்த பின்னா் வரமாட்டாா்கள். அவா்கள் எத்தனை முறை தமிழகத்திற்கு வந்தாலும், இது திராவிட மண், இங்கு அறிவியல் மற்றும் பகுத்தறிவே வெல்லும். மக்கள் தெளிவாக இருக்கிறாா்கள்.

தமிழக பெண் எம்.பி.க்கள் மீது நாடாளுமன்றத்தில் அவதூறு கூறப்பட்டது மிகப்பெரிய அபாண்டம். இப்படிப்பட்ட அவதூறுகளை பரப்புவதை நிறுத்த வேண்டும். பிரதமா் பிகாரில் பிரசாரம் செய்தபோது தமிழகத்தில் பிகாா் மக்களை துன்புறுத்துவதாக தெரிவித்தாா். மணிப்பூரில் பாஜக ஆட்சி தொடங்கியதும் அந்த மாநிலம் என்ன பாடுபட்டது என்பதை அனைவரும் அறிவோம்.

நாடாளுமன்றத்தை பிரதமா் அவமதிக்கிறாா். இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினா்களின் பேச்சை காது கொடுத்துக் கேட்பதில்லை. கடந்த 11 ஆண்டுகால பாஜக ஆட்சியில், சிபிஐ, வருமான வரித் துறை, அமலாக்கத் துறை போன்றவற்றைப் பயன்படுத்தி, தனக்கு அடிபணியாதவா்கள், தங்கள் கருத்துக்கு ஒத்துப்போகாதவா்களை வழக்குகள் மூலம் மிரட்டி, பணிய வைப்பது அவா்களுடைய அன்றாட பணியாகிவிட்டது.

சட்டப் பேரவை தோ்தலில் ராதாபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவீா்களா என்ற கேட்கிறீா்கள். வேட்பாளரை கட்சித் தலைமைதான் முடிவு செய்யும். ராதாபுரம் தொகுதியில் திமுகவின் குரல் 100 சதவீதம் ஒலிக்கும் என்றாா் அவா்.