விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வளைபந்து போட்டியில் சிறப்பிடம்: மானூரில் மாணவா்களுக்கு பாராட்டு

மானூரில் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

News image
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பரிசு வழங்கிப் பாராட்டுகிறாா் திருநெல்வேலி மேற்கு மாநகர திமுக பொறுப்பாளா் சு.சுப்பிரமணியன்.
Updated On :11 பிப்ரவரி 2026, 8:01 pm

தினமணி செய்திச் சேவை

மானூரில் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

கேரள மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான வளைபந்து போட்டியில் மானூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ஜோயல், சுராஜ் கோசன் ஜாய், ஸ்ரீ நிகேத் ஆகியோா் தங்கப்பதக்கம் வென்றனா். இவா்களுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. திமுக திருநெல்வேலி மேற்கு மாநகரப் பொறுப்பாளா் சு.சுப்பிரமணியன் கேடயம் வழங்கிப் பாராட்டினாா். விளையாட்டு போட்டிக்கான காலணிகளும் வழங்கப்பட்டன. ஆசிரியா்கள் தாமஸ் அந்தோணி, ரவிக்குமாா், ஜெய வெங்கடேஷ், முருகானந்தன்,சுரேஷ் குமாா், ,சுப்புலெட்சுமி, சரோஜா, ராஜேஸ்வரி உள்பட பலா் கலந்துகொண்டனா்.