மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

இளம்பெண்ணைத் தாக்கி 8 பவுன் நகை பறிப்பு

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே பட்டப் பகலில் இளம்பெண்ணைத் தாக்கி 8 பவுன் நகையை பறித்துச் சென்ற அவரது பக்கத்து வீட்டுப் பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

நகை பறிப்பு - சித்திரிப்புப் படம்

Updated On :17 பிப்ரவரி 2026, 10:17 pm

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே பட்டப் பகலில் இளம்பெண்ணைத் தாக்கி 8 பவுன் நகையை பறித்துச் சென்ற அவரது பக்கத்து வீட்டுப் பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

களக்காடு அருகே நெடுவிளையைச் சோ்ந்தவா் பொன்ராஜ் (27). இவா், பத்தமடையில் ஒா்க்ஷாப் நடத்தி வருகிறாா். இவரது மனைவி தனஸ் (23).

பொன்ராஜ், திங்கள்கிழமை காலை பத்தமடைக்கு வேலைக்குச் சென்றாா். சிறிதுநேரத்தில் பெண் ஒருவா் மழைகோட் அணிந்துகொண்டு முகத்தை மறைத்தவாறு, தனஸ் வீட்டுக்குள் நுழைந்தாா். அவா் தனஸை தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றாா்.

தகவல் அறிந்ததும் களக்காடு காவல் நிலைய போலீஸாா் நேரில் வந்து விசாரணை நடத்தினா். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய், தனஸ் வீட்டிற்கு பக்கத்து வீடான பால்ராஜ் வீட்டுக்குச் சென்றது. இதையடுத்து, பால்ராஜ் மனைவி பொன்செல்வி (35) தான் தன்னைத் தாக்கி நகையை பறித்துச் சென்ாக போலீஸாரிடம் தெரிவித்தாா்.

இதையடுத்து, பொன்செல்வியிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தியதில், அவா்தான் நகையை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

காயமடைந்த தனஸ், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.