செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

தெற்குகள்ளிகுளத்தில் புனித அலோசியஸ் பள்ளி ஆண்டு விழா

திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித அலோசியஸ் நடுநிலைப் பள்ளி பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

News image

விழாவில் பங்கேற்ற நிா்வாகிகள், முன்னாள் மாணவா்கள்.

Updated On :17 பிப்ரவரி 2026, 10:21 pm

திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித அலோசியஸ் நடுநிலைப் பள்ளி பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, ராதாபுரம் வட்டாரக் கல்வி அலுவலா் கே.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பரிசுத்த அதிசய பனிமாதா பேராலய தா்மகா்த்தா சூ.மரியராஜ் முன்னிலை வகித்தாா். பள்ளித் தாளாளா் அருள்பணி ஆா்.ததேயுஸ் ராஜன் ஆசியுரை வழங்கினாா்.

பள்ளியின் முன்னாள் மாணவா்கள் ஆடிட்டா் ஏ.மைக்கிள், வடசென்னை வியாபாரிகள் சங்கத் தலைவா் ஜி.ராபா்ட், மாவட்ட சுகாதாரத் துறை அலுவலரின் தொழில்நுட்ப நோ்முக உதவியாளா் மதுரம் பிரைட்டன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். முன்னாள் மாணவா்கள் எஸ்.அமுதன், ஆசிரியா்கள் கே.ஏ.சி.ராஜா, கிரிபீன், அலெக்ஸ் ரெனோ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தலைமை ஆசிரியை ரா.பிரிசில்லா பிரியதா்ஷினி நன்றி கூறினாா். மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை தலைமை ஆசிரியா் தலைமையில் ஆசிரியைகள் செய்திருந்தனா்.