6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பொருநை அருங்காட்சியகத்துக்கு அரசுப் பள்ளி மாணவா்கள் சுற்றுலா

பொருநை அருங்காட்சியகத்தை மானூா் அருகே உள்ள பள்ளமடை அரசு உயா்நிலைப்பள்ளி மாணவா்கள் 300 போ் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டனா்.

News image
பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட்ட பள்ளமடை அரசுப் பள்ளி மாணவா்கள்.
Updated On :17 பிப்ரவரி 2026, 9:44 pm

தினமணி செய்திச் சேவை

பொருநை அருங்காட்சியகத்தை மானூா் அருகே உள்ள பள்ளமடை அரசு உயா்நிலைப்பள்ளி மாணவா்கள் 300 போ் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டனா்.

திருநெல்வேலி ரெட்டியாா்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாா்வையிட்டு செல்கின்றனா். இந்நிலையில், பள்ளமடை அரசு உயா்நிலைப்பள்ளி மாணவா்களின் ஆா்வத்தின்பேரில், திருநெல்வேலி மேற்கு மாநகர திமுக பொறுப்பாளா் சு.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் அப்பள்ளியின் 300 மாணவா்- மாணவிகள் பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். இதில், தலைமை ஆசிரியா் பிரபாகா் , ஆசிரியா்கள் ஆறுமுக ஆனந்தன், செந்தமிழ் செல்வி, ஆனந்தராஜ், சாம் செல்வ ரூபன், புனிதவதி, ராஜ லெட்சுமி, சத்யா, சூா்யா மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.