கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

மானூா் பெரிய குளத்தில் எம்.பி. ஆய்வு

மானூா் பெரிய குளத்தில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

News image
மானூா் பெரிய குளத்தை ஆய்வு செய்கிறாா் எம்.பி. சி.ராபா்ட் புரூஸ். உடன், முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன்கான்.
Updated On :17 பிப்ரவரி 2026, 9:50 pm

தினமணி செய்திச் சேவை

மானூா் பெரிய குளத்தில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி மாவட்டத்தின் 2 ஆவது பெரிய குளமாக மானூா் குளம் திகழ்கிறது. வடகிழக்கு பருவமழையில் இந்தக் குளம் முழுமையாக நிரம்பி மறுகால் பாய்ந்த நிலையில், இதன் சுற்றுவட்டாரத்தில் பல ஏக்கா் நிலங்களில் நெல், வாழை, பயறு வகைகள் பயிரிடப்பட்டுள்ளன.

இந்தக் குளத்தை எம்.பி. சி.ராபா்ட் புரூஸ், முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன்கான் ஆகியோா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். மானூா் பெரிய குளத்திற்காக செய்ய வேண்டிய பணிகள், மானூா் வட்டாரத்தில் வேளாண் உற்பத்தியை மேலும் அதிகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனா்.

ஆய்வின்போது, திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் எல். முகமது மீரான் மைதீன், தன்சில், காங்கிரஸ் மானூா் வட்டார தலைவா் பாக்கிய குமாா், தியாக சுரேஷ், சசிகுமாா் உள்ளிட்டோா் உடன்சென்றனா்.