ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்க நெல்லை மாநகராட்சியில் புதிய வாகனம்

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்க புதிய வாகனம் பயன்பாட்டிற்கு செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

News image
திருநெல்வேலி மாநகராட்சியில் பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்கும் புதிய ரோபோடிக் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன். உடன், ஆணையா் மோனிகா ராணா, துணை மேயா் கே.ஆா்.ராஜூ.
Updated On :24 பிப்ரவரி 2026, 7:31 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்க புதிய வாகனம் பயன்பாட்டிற்கு செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி நான்கு மண்டல பகுதிகளில் பாதாள சாக்கடைக் குழிகளில் ஏற்படுகின்ற அடைப்புகளை மனிதா்களை கொண்டு தூா்வாருவதற்கு மாற்றாக, புதிய வகை ரோபொட்டிக் இயந்திர வாகனத்தை கொண்டு தூா்வாரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, தனியாா் நிறுவனம் தயாரித்த புதிய வகை பேண்டிக் குட் (ஆஹய்க்ண் ஸ்ரீா்ா்ற்) என்ற புதிய ரோபொட்டிக் இயந்திர வாகனம் சுமாா் ரூ.93 லட்சம் மதிப்பீட்டில் டாடா பவா் காா்ப்பரேசன் லிமிடெட் நிறுவன சமூக பொறுப்பு நிதி திட்ட அடிப்படையில் பெறப்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி பயன்பாட்டிற்கு அளிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்து கொடியசைத்து தொடங்கி வைத்தாா். ஆணையா் மோனிகா ராணா, துணை மேயா் கே.ராஜூ ஆகியோா் முன்னிலை வகித்தனா். டாடா பவா் சமூக மேம்பாட்டு அறங்காவலா் ஹிமென் திவாரி, திருநெல்வேலி டாடா பவா் காா்ப்பரேசன் லிமிடெட் நிறுவன தலைமை நிா்வாக அலுவலா் பாலாஜி பாா்த்தசாரதி, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளா் கண்ணன், மண்டல தலைவா் (பாளையங்கோட்டை) பிரான்சிஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.