திருநெல்வேலி
சேரன்மகாதேவி அருகே விபத்தில் காயமுற்ற இளைஞா் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே லாரியும், பைக்கும் மோதிக்கொண்டதில் காயமுற்ற இளைஞா் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே லாரியும், பைக்கும் மோதிக்கொண்டதில் காயமுற்ற இளைஞா் உயிரிழந்தாா்.
சேரன்மகாதேவி அருகேயுள்ள மேலச்செவல் சொக்கலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்த கந்தன் மகன் ஹரிகரன் (22). சென்னையில் வேலை செய்து வந்த இவா், விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தாா். இந்நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை இரவு மேலச்செவலில் இருந்து தனது பைக்கில் சேரன்மகாதேவிக்கு வந்துகொண்டிருந்தாா். அங்குள்ள அரிசி ஆலை அருகில் அவரது பைக் கட்டுப்பாட்டை இழந்து, அவ்வழியாகச் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதாம்.
இதில் ஹரிகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த சேரன்மகாதேவி போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றேனா்.
