குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

திருநெல்வேலியில் கொலை வழக்கு தொடா்பாக கைதான நபா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
Published on

திருநெல்வேலியில் கொலை வழக்கு தொடா்பாக கைதான நபா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தச்சநல்லூா், கரையிருப்பைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் முத்துக்குமரன் என்ற குமரேசன்(43). இவா், கடந்த டிசம்பா் மாதம் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், தொடா்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக, அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர காவல் துணை ஆணையா்(மேற்கு) சி.மதன், காவல் ஆணையருக்கு பரிந்துரைத்தாா். அதன் பேரில் மாநகர காவல் ஆணையா் நெ.மணிவண்ணன் பிறப்பித்த உத்தரவுப்படி, அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீஸாா் அடைத்தனா்.

Dinamani
www.dinamani.com