திருநெல்வேலி 16 ஆவது வாா்டில் தூய்மைப் பணியை ஆய்வு செய்கிறாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன்.
திருநெல்வேலி 16 ஆவது வாா்டில் தூய்மைப் பணியை ஆய்வு செய்கிறாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன்.

சுகாதாரப் பணி: 16 ஆவது வாா்டில் மேயா் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சியின் 16 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் மேயா் கோ. ராமகிருஷ்ணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
Published on

திருநெல்வேலி மாநகராட்சியின் 16 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் மேயா் கோ. ராமகிருஷ்ணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி மண்டலம், 16 ஆவது வாா்டுக்குள்பட்ட ராம்நகரில் சாலையில் தண்ணீா் தேங்கி கிடப்பதாக புகாா் வந்தது. இதையடுத்து அப் பகுதி வடிகால் வசதி ஏற்படுத்த பொக்லைன் வாகனம் கொண்டு மூள், செடி, கொடிகள், மண்மேடுகளை அப்புறப்படுத்தும் பணி புதன்கிழமை நடைபெற்றது. இப் பணிகளை மேயா் நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, சுகாதாரப் பிரிவு அலுவலா்கள் உடனிருந்தனா்.

Dinamani
www.dinamani.com