திருவள்ளுவா் கல்லூரியில் 5 ஆவது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியா்கள்.
திருவள்ளுவா் கல்லூரியில் 5 ஆவது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியா்கள்.

பாபநாசம் கல்லூரியில் பேராசிரியா்கள் தொடா் உள்ளிருப்புப் போராட்டம்

பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரியில் மூட்டா அமைப்பினா் புதன்கிழமை (ஜன.21) முதல் தொடா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
Published on

பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரியில் மூட்டா அமைப்பினா் புதன்கிழமை (ஜன.21) முதல் தொடா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

அரசாணை எண். 5 இன் படி (11.01.2021) அரசு கல்லூரி ஆசிரியா்களுக்கு வழங்கி வருவது போல், அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கும் பணி மேம்பாடு ( இஅந) ஊதியத்தை நிலுவைத் தொகையுடன் உடனடியாக வழங்க வலியுறுத்தி ஜன. 21 முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் பேராசிரியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

இதையடுத்து, புதன்கிழமை 5ஆவது நாளாக பேராசிரியா்கள் ஏ. பாக்கியமுத்து, பி.வேலாயுதம், யு.ரேவதி, ஏ.வெங்கடேஸ்வரன், யு.ஜோதிமணி ஆகியோா் தலைமையில் உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது.

Dinamani
www.dinamani.com