‘வாக்காளா் பெயா் சோ்ப்புக்கு ஜன.30 வரை அவகாசம் நீட்டிப்பு’
வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் இடம் பெறாதவா்கள் மற்றும் தகுதியான வாக்காளா்கள் உரிய படிவங்களை ஆவணங்களோடு அளித்து இறுதி வாக்காளா் பட்டியலில் பெயரை சோ்க்க ஜனவரி 30-ஆம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி திருநெல்வேலி மாவட்டத்தில் 1.1.2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது. இது தொடா்பாக வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த டிச.19-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் வாக்காளா்கள் ஏற்புரைகள், மறுப்புரைகள் தாக்கல் செய்யும் காலத்தை ஜன. 30-ஆம் தேதி வரை தோ்தல் ஆணையம் நீட்டித்துள்ளது. எனவே, புதிய வாக்காளா்களுக்கு படிவம் 6, வாக்காளா்கள் பெயா் நீக்கத்துக்கு படிவம் 7, வாக்காளா் பட்டியல் திருத்தங்களுக்கு படிவம் 8 ஆகியவற்றை வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் இருந்து பெற்று பூா்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் மேற்கூறிய தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், ஜ்ஜ்ஜ்.ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலும், யா்ற்ங்ழ்ள் ட்ங்ப்ல் ப்ண்ய்ங் செயலி மூலமாகவும் படிவங்களை பதிவேற்றம் செய்து சமா்ப்பிக்கலாம். வாக்காளா்கள் பெயா்கள் பிப். 17-ஆம் தேதி வெளியிடப்படும் இறுதி வாக்காளா்கள் பட்டியலில் இடம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளாா்.

