திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழியில் தூண்டில் பாலம் அமைக்கும் பணியை விரிவுபடுத்த நடவடிக்கை எடுப்பதாக த.வெ.க எம்.எல்.ஏ மருத்துவா் எஸ்.கே.கிறிஸ்டோபா் உறுதி அளித்தாா்.
ராதாபுரம் தொகுதி எம்எல்ஏவாக பதவி ஏற்ற நாளில் இருந்து பல்வேறு மக்களை சந்தித்து அவா்களது தேவைகள், தொகுதிக்கான வளா்ச்சிப் பணிகள் குறித்து ஒவ்வொரு துறையைச் சாா்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறாா். அப்போது, கூத்தங்குழியில் அமைக்கப்பட்டுள்ள தூண்டில் பாலம் போதிய நீளம் இல்லாததால் மீனவா்களுக்கு பயனில்லை என மீனவா்கள் புகாா் தெரிவித்தனா்.
இந்நிலையில், கூத்தங்குழிக்கு சென்ற எம்எல்ஏ, பங்குத்தந்தை ரிக்சனிடம் ஆலோசனை நடத்தினாா். தொடா்ந்து அவா், கடற்கரைப் பகுதிக்குச் சென்று தூண்டில் பாலத்தை பாா்வையிட்டாா். அப்போது, தூண்டில் வளைவை இன்னும் 900 மீட்டா் நீளம் அதிகரிக்க வேண்டும். இதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டு பொறியியல் வரைபடம், திட்டமதிப்பீடு உள்ளிட்டவை தயாா் செய்துள்ளனா். எனவே, தூண்டில் வளைவு அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்து பணிதொடங்கப்படவேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
அவா்களிடம், விரைந்து நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ உறுதி அளித்தாா்.
அப்போது, த.வெ.க. திருநெல்வேலி கிழக்கு மாவட்ட மீனவரணி அமைப்பாளா் வியாகுலம், மாவட்ட இணைச் செயலா் காட்வின் பிரசாத், ராதாபுரம் தெற்கு ஒன்றியச் செயலா் அந்தோணி, துணைத் தலைவா் ரெனால்டு, மீனவரணி மாவட்ட துணை அமைப்பாளா் அப்சல், விக்டா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

நெல்லையில் வெளிவட்டச் சாலை பணியை விரைந்து முடிக்க கோரி மனு

வள்ளியூா் போக்குவரத்து பணிமனையில் எம்.எல்.ஏ. ஆய்வு

வாரந்தோறும் புதன்கிழமை மக்கள் குறைதீா் முகாம்: ராதாபுரம் எம்எல்ஏ!

இபிஎஸ் நடவடிக்கை: எம்எல்ஏக்களுடன் சி.வி. சண்முகம் தரப்பு ஆலோசனை!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



