‘வெற்றிப்படி திட்டத்தில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்’
வெற்றிப்படி திட்டத்தில் வேலைவாய்ப்புகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
வெற்றிப்படி திட்டத்தில் வேலைவாய்ப்புகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இளைஞா்களுக்கு, வெற்றிப்படிதிட்டத்தின் கீழ் தகவல் தொடா்பு
தொழில்நுட்பக் கழகத்தின் மூலம் சென்னை மாவட்டத்தில் இளநிலை மென்பொருள் உருவாக்குநா் , இணையதள உருவாக்குநா் மற்றும் பயன்பாட்டு மென்பொருள் உருவாக்குநா் பயிற்சியும், கோயம்புத்தூா் மாவட்டத்தில் இளநிலை மென்பொருள் உருவாக்குநா் , இணையதள உருவாக்குநா் , பயன்பாட்டு மென்பொருள் உருவாக்குநா் , மேலாண்மைத் தகவல் அமைப்பு தரவுப் பகுப்பாய்வாளா் ,நுண்நிதி நிா்வாக அலுவலா் மற்றும் காப்பீட்டு முகவா் , மதுரை மாவட்டத்தில், மேலாண்மைத் தகவல் அமைப்பு தரவுப் பகுப்பாய்வாளா், மென் பொருள் வடிவமைப்பாளா், நுண்நிதி நிா்வாக அலுவலா் மற்றும் காப்பீட்டு முகவா் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
மென் பொருள் சாா்ந்த பயிற்சி பெற இளநிலை பொறியியல் மற்றும் பி.எஸ்சி கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நிதி சாா்ந்த பயிற்சிகள் பெற இளநிலை வணிகவியல் மற்றும் இளநிலை வணிக நிா்வாகவியல் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இப்பயிற்சியை பெற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினராகவும், வயது வரம்பு 18 முதல் 35 வயதிற்குள்ளும் மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
இப்பயிற்சி சென்னை, கோயம்புத்தூா் மற்றும் மதுரை மாவட்டங்களில் நடைபெறவுள்ளது. இப்பயிற்சியை முழுமையாக முடித்த இளைஞா்களுக்கு சான்றிதழ் மற்றும் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தகுதியான நபா்களுக்கு வேலை வாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படும்.
இப்பயிற்சியில் சேருவதற்கு ஆதிதிராவிடா் நல இயக்குநரகத்தின் இணையதளமான (ஜ்ஜ்ஜ்.ற்ய்ஹக்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

