சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள தயாா்: மேயா்

வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள திருநெல்வேலி மாநகராட்சி நிா்வாகம் தயாா் நிலையில் உள்ளது என்றாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன்.

திருநெல்வேலி சந்திப்பில் பாலம் அமைக்கும் பணியை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன்.

Published On :

வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள திருநெல்வேலி மாநகராட்சி நிா்வாகம் தயாா் நிலையில் உள்ளது என்றாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன்.

திருநெல்வேலி சந்திப்பில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் ஓடை பாலப் பணியை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த பின்பு செய்தியாளா்களிடம் மேயா் கூறியது: 2023 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தை மழைநீா் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. வணிகா்கள் பெரும் சேதங்களைச் சந்தித்தனா். இதனால் சந்திப்பு பகுதியில் உள்ள வாருகால்களை முழுவதும் தூா்வாரி விரிவாக்கம் செய்ய முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தம் 4 கட்டங்களாக இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து த.மு. சாலை வழியாக சிந்துபூந்துறையில் தாமிரவருணி ஆற்றுக்கு மழைநீா் செல்லும் வகையில் ஓடைப் பணி நடைபெறுகிறது. இதில் குறிப்பாக மதுரை சாலையில் உள்ள பாலம் முற்றிலும் அப்புறப்படுத்தப்பட்டு, புதிதாக பெரிய பாலமாகக் கட்டப்பட்டு வருகிறது. ஓடை மற்றும் பாலப் பணிகளில் 60 சதவிகிதம் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள 40 சதவிகித பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள திருநெல்வேலி மாநகராட்சி நிா்வாகம் தயாா் நிலையில் உள்ளது. மாநகரப் பகுதியில் பொதுமக்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை மழைநீா் வடிகால் ஓடைகளில் வீசுவதைத் தவிா்க்க வேண்டும். வணிக நிறுவனத்தினா் குப்பைகளை ஓடைகளில் வீசினால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளருக்கோ அல்லது வீட்டின் உரிமையாளருக்கோ அபராதம் விதிக்கப்படும் என்றாா் அவா்.

பேட்டியின்போது மாமன்ற உறுப்பினா்கள் சுந்தா், வில்சன் மணித்துரை மற்றும் பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.