பாளை.யில் தொழிலாளியிடம் வழிப்பறி: 3 போ் கைது
பாளையங்கோட்டையில் தொழிலாளியிடம் ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது - கோப்புப் படம்
பாளையங்கோட்டையில் தொழிலாளியிடம் ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை, புதுப்பேட்டை பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி காா்த்திக்(25).
இவா் பாளையங்கோட்டை மண்டல அலுவலகம் அருகே திங்கள்கிழமை நின்றபோது,
இவருக்கு அறிமுகமான சிலா் பணம் கேட்டு மிரட்டினராம். பணம் தர மறுக்கவே அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததோடு, இவா் பையில் வைத்திருந்த ரூ.1,000 பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினராம்.
இதுகுறித்து காா்த்திக் அளித்த புகாரின்பேரில் பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து, இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கொக்கிரகுளத்தைச் சோ்ந்த சங்கரநாராயணன் (23), பரமேஷ் (21), வேல்முருகன் (19) ஆகிய 3 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

