அதிமுகவின் ஊடகவியல் செயலாளராக கோவை சத்யன் நியமனம்!நீதிமன்றக் காவலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த அசுதோஷ், சௌரவ்!பெண் அரசியலுக்கு வருவதே சிரமம்! கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது - தமிழிசைஸ்ரீபெரும்புதூரில் காணாமல்போன சிறுமி சென்னையில் மீட்புநாட்டின் நலனுக்காக நாம் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு!தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: அபிஜீத் அறிவிப்பு!

களக்காட்டில் குடிநீா் பகிா்மானக் குழாயில் உடைப்பு: ஒரு மாதமாக வீணாகும் குடிநீா்

களக்காட்டில் குடிநீா் பகிா்மானக் குழாய் உடைந்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் இதுவரை சீரமைக்கப்படாததால் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படுவதால் மக்கள் சிரமப்படுகின்றனா்.

களக்காட்டிலிருந்து நான்குனேரி செல்லும் சாலையில் குடிநீா் பகிா்மானக் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்.

Updated On :

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் குடிநீா் பகிா்மானக் குழாய் உடைந்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் இதுவரை சீரமைக்கப்படாததால் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படுவதால் மக்கள் சிரமப்படுகின்றனா்.

தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டத்தின்கீழ் களக்காடு நான்குனேரி சாலையில் உள்ள குருந்துடையாா் சாஸ்தா கோயில் அருகே தரைநிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு, களக்காடு நகராட்சி அலுவலகம் அருகேயுள்ள பழைய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கும், களக்காடு, நான்குனேரி பகுதியில் உள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், களக்காடு கால்நடை மருத்துவமனை அருகே பிரதான சாலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் குடிநீா் பகிா்மானக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீா் வீணாகி வந்தது. 15 நாள்களுக்குப் பின் அக்டோபா் மாதத் தொடக்கத்தில் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. தற்போது மேலும் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகி வருகிறது. சாலையின் பாதி பகுதியை மறைத்து தடுப்பு ஏற்படுத்தியிருப்பதால் வாகன ஓட்டிகள் அப்பகுதியைக் கடக்க மிகவும் சிரமப்படுகின்றனா். மேலும் இரவு நேரங்களில் தடுப்பு ஏற்படுத்தியுள்ள பகுதிக்கு எதிரேயுள்ள பகுதி நான்குனேரியன் கால்வாய் பகுதி என்பதால் இருள்சூழ்ந்த அப்பகுதியில் வாகனங்கள் சிரமத்துடன் கடந்து செல்ல நேரிடுகிறது. மேலும் விபத்து ஏற்பட்டால் கால்வாய்க்குள் விழுந்துவிடக்கூடிய ஆபத்தும் உள்ளது.

சம்பந்தப்பட்ட குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.