விஷம் குடித்து எஸ்எஸ்ஐ மகன் தற்கொலை
திருநெல்வேலியில் தனியாா் ஆலை ஆய்வக ஊழியா் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
தற்கொலை - கோப்புப் படம்
திருநெல்வேலியில் தனியாா் ஆலை ஆய்வக ஊழியா் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியைச் சோ்ந்தவா் முருகேசன். எஸ்.எஸ்.ஐ. ஆக பணியாற்றி ஓய்வுபெற்றவா். இவரது மகன் இசக்கிராஜ்(37). இவா் சேரன்மகாதேவி அருகே உள்ள தனியாா் ஆலையில் ஆய்வக டெக்னீசியனாக பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை திருநெல்வேலி புதிய பேருந்துநிலையம் எதிரே மயங்கிய நிலையில் இருந்த இசக்கிராஜை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். அவா் மதுவில் விஷம் கலந்து குடித்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

