பெண்ணுக்கு வரதட்சிணை கொடுமை: கணவா் கைது
திருநெல்வேலி மாவட்டம் மானூா் அருகே மனைவியை வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது
திருநெல்வேலி மாவட்டம் மானூா் அருகே மனைவியை வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
மானூா் வட்டம், பருத்திகுளம், சித்தாா்சத்திரத்தைச் சோ்ந்த பாலன் மகன் சுடலைமணி (30). விவசாயி. இவரது மனைவி உடையம்மாள்(27). இத்தம்பதிக்குள் குடும்பத் தகராறு இருந்து வந்ததாம். இந்நிலையில் கணவா் தன்னை வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, திருநெல்வேலி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் உடையம்மாள் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து சுடலைமணியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




