திருப்பாவை-திருவெம்பாவை போட்டியில் பங்கேற்க அழைப்பு

தூத்துக்குடியில் ஜனவரி 10ஆம் தேதி நடைபெறும் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் மற்றும் கட்டுரைப் போட்டியில் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஜனவரி 10ஆம் தேதி நடைபெறும் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் மற்றும் கட்டுரைப் போட்டியில் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலர் ச. அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ,ர் மாணவிகளுக்கான பாவை விழா போட்டிகள் ஜனவரி 10 ஆம் தேதி சிவன் கோயில் என அழைக்கப்படும் அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் திருக்கோயிலில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்க விரும்பும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் திருப்பாவையில் 1 முதல் 5 பாசுரங்கள் அல்லது திருவெம்பாவையில் 1 முதல் 5 பாசுரங்கள் ஒப்பிக்க வேண்டும். கட்டுரைப் போட்டியில் பங்கேற்போர் "ஆண்டாளின் ஆர்வம் அல்லது மாணிக்கவாசகரின் பெருமை' என்ற தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும்.
ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்க விரும்பும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் திருப்பாவையில் 1 முதல் 10 பாசுரங்கள் அல்லது திருவெம்பாவையில் 1 முதல் 10 பாசுரங்கள் ஒப்பிக்க வேண்டும். கட்டுரைப் போட்டியில் பங்கேற்போர் மார்கழியின் பெருமை அல்லது ஆருத்ரா தரிசனச் சிறப்பு என்ற தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும்.
ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்க விரும்பும் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் திருப்பாவையில் 1 முதல் 20 பாசுரங்கள் அல்லது திருவெம்பாவையில் 1 முதல் 20 பாசுரங்கள் ஒப்பிக்க வேண்டும். கட்டுரைப் போட்டியில் பங்கேற்போர் "பன்னிரு ஆழ்வார்களில் ஐவர் பண்பு அல்லது அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஐவர் தொண்டு' என்ற தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு பரிசு வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 0461-2320680 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com