திமுக கொடியேற்று விழா

பொங்கல் பண்டிகையையொட்டி உடன்குடி நகரின் பல்வேறு இடங்களில் திமுக கொடியேற்று விழா நடைபெற்றது.

பொங்கல் பண்டிகையையொட்டி உடன்குடி நகரின் பல்வேறு இடங்களில் திமுக கொடியேற்று விழா நடைபெற்றது.
நகரச் செயலர் ஜாண் பாஸ்கர் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் பாலசிங், பரமன்குறிச்சி ஊராட்சி திமுக செயலர் இளங்கோ, உடன்குடி நகர முன்னாள் செயலர் கனகலிங்கம், மா. ரவிராஜா, வேம்படிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய திமுக அவைத்தலைவர் ரிபாய்தீன் கொடியேற்றினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com