தூத்துக்குடியில் ரூ.18.60 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: இருவர் கைது

தூத்துக்குடியில் மதிப்பிழந்த பழைய ரூபாய் நோட்டுகள் ரூ.18.60 லட்சம் வைத்திருந்ததாக திங்கள்கிழமை இருவரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் மதிப்பிழந்த பழைய ரூபாய் நோட்டுகள் ரூ.18.60 லட்சம் வைத்திருந்ததாக திங்கள்கிழமை இருவரை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே வடபாகம் போலீஸார் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் வைத்திருந்த பையை போலீஸார் சோதித்து பார்த்தபோது, அதில், மதிப்பிழந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கட்டுகட்டாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் வடபாகம் காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்று விசாரனை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானுர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் (29) , செந்தாமரை கண்ணன் (28) என தெரியவந்தது. மேலும், அவர்களிடம் இருந்து ரூ. 18 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை போலீஸார் பறிமுதல்
செய்தனர். இதுகுறித்து மாநகர காவல் உதவி கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் கூறியது: கோவில்பட்டியைச் சேர்ந்த சங்கர் என்பவர் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித் தருவதாக தெரிவித்ததன் அடிப்படையில் இருவரும் பணத்தைக் கொண்டுவந்துள்ளனர். பணத்தை கொடுத்து அனுப்பிய பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த ராஜ், ராமர், வைத்தியலிங்க ராஜா மற்றும் கோவில்பட்டியைச் சேர்ந்த தரகர் சங்கர் ஆகிய நான்கு பேரையும் தேடி வருகிறோம். அவர்கள் பிடிபட்ட பிறகு மேலும் தகவல்கள் தெரிய வரும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com