2ஆவது நாளாக மறியல்: சத்துணவு ஊழியர்கள் 374 பேர் கைது

வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடியில் இரண்டாவது

வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடியில் இரண்டாவது நாளாக புதன்கிழமை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 374 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், மாதாந்திர ஓய்வூதியம் 3,500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் மார்ச் 21ஆம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாள்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.
அதன்படி, தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 517 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், இரண்டாவது நாளாக சத்துணவு ஊழியர் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினர் ரத்தினாவதி தலைமையில் பாளையங்கோட்டை சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பொன்சேகர், செயலர் தமிழரசன் உள்பட 45 ஆண்கள், 329 பெண்கள் என 374 பேரை மத்திய பாகம் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com