விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை

விளாத்திகுளம் அருகே அயன் செங்கல்படை ஊராட்சி கண்மாயில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை வேருடன் அகற்றும் ஏலத்தில் முறைகேடும்

விளாத்திகுளம் அருகே அயன் செங்கல்படை ஊராட்சி கண்மாயில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை வேருடன் அகற்றும் ஏலத்தில் முறைகேடும்,  ஊராட்சிக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளதாகவும் அதை கண்டித்து கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
விளாத்திகுளம் அருகே   அயன்செங்கல்படை ஊராட்சியில்,  அயன்செங்கல்படை மற்றும் கே.குமாரபுரம் ஆகிய இரு கிராமங்கள் உள்ளன.  அயன்செங்கல்படை ஊராட்சியில் 238 ஏக்கர் பரப்பளவில் உள்ள கண்மாயில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை வேருடன் அகற்ற விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் ஏலம் விடப்பட்டதில் முறைகேடு நடந்ததாகக் கூறி  இரு கிராம மக்களும், கே. குமாரபுரம் கிராமத் தலைவர் ஜெயபால் தலைமையில் , ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
முற்றுகையில் ஈடுபட்ட மக்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரவிந்தன்,  முருகானந்தம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி  நிர்வாக காரணங்களுக்காக ஏற்கெனவே விடப்பட்ட ஏலம் ரத்து செய்யப்படுகிறதெனவும்,  சீமை கருவேல மரங்களை அகற்றும் பொருட்டு மறு ஏலத்துக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக கடிதம் அளித்ததையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com