மகா சிவராத்திரி: கோவில்பட்டி, மெஞ்ஞானபுரத்தில் பால்குட ஊர்வலம்

கோவில்பட்டி மாதாங்கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ குருநாதர் சமேத ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசி மகா சிவராத்திரியையொட்டி பால்குட ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி மாதாங்கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ குருநாதர் சமேத ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசி மகா சிவராத்திரியையொட்டி பால்குட ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் மாசி மகா சிவராத்திரி விழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி மற்றும் அம்பாள் திருவீதியுலா நடைபெற்று வருகிறது. 3ஆம் திருநாளான திங்கள்கிழமை இரவு 11 மணிக்கு இருளப்பசுவாமி முக கப்பறை திருவீதியுலா நடைபெற்றது.
4ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை ஸ்ரீ குருநாதர் சமேத அங்காள பரமேஸ்வரி அம்மன் நண்பர்கள் நற்பணி மன்றத்தினர் சார்பில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. பால்குட ஊர்வலம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கல்யாண மஹால் முன்பிருந்து புறப்பட்டு, மாதாங்கோயில் தெரு, மார்க்கெட் சாலை, கிருஷ்ணன் கோயில் தெரு வழியாக கோயிலை வந்தடைந்தது.
அதைத் தொடர்ந்து, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
உடன்குடி:  மகா சிவராத்திரியையொட்டி  உடன்குடி, குலசேகரன்பட்டினம் பகுதி கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மெஞ்ஞானபுரத்தில் 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில்,  சிதம்பரேஸ்வரர் திருக்கோயில்,  அறம் வளர்த்த நாயகி உடனுறை காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் திருக்கோயில், உடன்குடி  கண்டுகொண்ட விநாயகர் திருக்கோயில், செட்டியாபத்து சிவன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் இரவு முழுவதும் நடை திறந்து வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள், நான்கு கால பூஜைகள், பன்னிரு திருமுறை கள், அகண்ட நாம பஜனை  நடைபெற்றது.
நங்கைமொழி அருள்மிகு ஞானப்பிரசுன்னாம்பிகை சமேத காளத்தீஸ்வரர் திருக்கோயிலில் 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. மெஞ்ஞானபுரம் பஜாரில் பால்குட  ஊர்வலத்தை அய்யா வழிப் பாடகர் குரு சிவச்சந்திரன், காவல் உதவி ஆய்வாளர் மீனாம்பிகை ஆகியோர்  தொட ங்கிவைத்தனர். 
ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியே கோயிலை வந்தடைந்தவுடன் சுவாமிக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. 
இதில், இந்து முன்னணி மாவட்டத் தலைவர் முருகேசன், மாவட்டச் செயலர் சக்திவேல், பாஜக மாவட்ட விவசாய அணிச் செயலர் செந்தூர்பாண்டி, பாஜக மாவட்ட அணி நிர்வாகிகள் பரமசிவன், திருச்செந்தூர் காந்தி காய்கனி மார்க்கெட் சங்கத் தலைவர் திருப்பதி உள்பட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com