ஆவின் அலுவலகத்தில் ரூ. 10 கோடியில்  உள்கட்டமைப்புகள்: ஆவின் தலைவர் தகவல்

திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்ட ஆவின் அலுவலகத்தில் ரூ. 10 கோடியில் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என்றார் அதன் தலைவர் என். சின்னத்துரை.

திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்ட ஆவின் அலுவலகத்தில் ரூ. 10 கோடியில் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என்றார் அதன் தலைவர் என். சின்னத்துரை.
 இதுகுறித்து அவர் திங்கள்கிழமை கூறியது:
 திருநெல்வேலி ரெட்டியார்பட்டி சாலையில் அமைந்துள்ள திருநெல்வேலி ஆவின் நிறுவனத்துக்கு நபார்டு வங்கி நிதி உதவி மூலம் 100 சதவீத மானியத்தில் ரூ.10 கோடி மதிப்பில் உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் ரூ.50 லட்சம் அரசு நிதி உதவியுடன் நவீன ஆவின் பாலகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு நிதி உதவியுடன் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 30 ஆவின் பார்லர்கள் நிறுவி பொதுமக்களுக்கு தரமான பால் மற்றும் உபபொருள்கள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  
 தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின்  கீழ் ரூ. 52 லட்சம் மதிப்பில் கப்புகளில் தயிர் நிரப்பும் இயந்திரம் நிறுவப்பட்டு டிசம்பர் மாதம் முதல் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
 திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 430 பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு சராசரி 80,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.  பால் கொள்முதலை ஒரு லட்சம் லிட்டராக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
 சராசரியாக நாள் ஒன்றிற்கு 42,500 லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  உபரியான பால் திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரி ஒன்றியத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது.  தினசரி உள்ளுர் விற்பனை 42,500 லிட்டரில் இருந்து 60,000 லிட்டராக உயர்த்துவதற்கு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com