திருச்செந்தூரில் விஸ்வ பிரம்மா ஜெயந்தி

திருச்செந்தூரில் விஸ்வ பிரம்மா ஜெயந்தி விழா நடைபெற்றது.

திருச்செந்தூரில் விஸ்வ பிரம்மா ஜெயந்தி விழா நடைபெற்றது.
இதையொட்டி, திருச்செந்தூர், மைலப்புரம் தெருவில் உள்ள விஸ்வபிரம்மா சமுதாய மடத்தில் அமைந்துள்ள சன்னதியில், அதிகாலை நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், விஸ்வகர்மா ஹோமம் ஆகியவை நடைபெற்றன.
தொடர்ந்து சுவாமி விஸ்வ பிரம்மாவிற்கு 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 
ஏற்பாடுகளை தலைவர் வள்ளியப்பன், செயலர் சிவானந்தம், உபதலைவர் சுடலைமுத்து உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com