பெருமாள்குளம் ஸ்ரீவேம்படி சுவாமி கோயில் கொடைவிழா

சாத்தான்குளம் அருகே உள்ள பெருமாள்குளம் ஸ்ரீவேம்படி சுவாமி கோயில் ஆவணி கொடை விழா நடைபெற்றது. 

சாத்தான்குளம் அருகே உள்ள பெருமாள்குளம் ஸ்ரீவேம்படி சுவாமி கோயில் ஆவணி கொடை விழா நடைபெற்றது. 
இதையொட்டி காலை 9 மணிக்கு புதுக்குளம் ஸ்ரீகலுங்குடையார் சாஸ்தா, ஸ்ரீவெற்றி விநாயகர், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஸ்ரீசுந்தராட்சி அம்மன் கோயில் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வருதல்,  நண்பகல் 12 மணிக்கு கணபதி ஹோமம், கும்பம் ஏற்றுதல், வேம்படி சுவாமி, சிவனனைந்த பெருமாள், பிரம்மசக்தி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. மாலை 4 மணிக்கு மேளம், மகுட இசை, 5 மணிக்கு பொங்கலிடுதல், 6 மணிக்கு கன்னியை அழைத்து வழிபடுதல், இரவு 7 மணிக்கு மேள,  மகுட கச்சேரி,  8 மணிக்கு சிவன் வழிபாடு, 9 மணிக்கு சாஸ்தா அழைத்தல், இரவு 10 மணிக்கு அலங்கார பூஜை நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை, தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com