ஸ்டெர்லைட் ஆய்வுக் குழு வருகை தாமதமாகும்: ஆட்சியர் தகவல்

தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி அகர்வால் தலைமையிலான ஸ்டெர்லைட் ஆய்வுக் குழு வருகை தாமதமாகும் என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி. தூத்துக்குடியில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்ட

தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி அகர்வால் தலைமையிலான ஸ்டெர்லைட் ஆய்வுக் குழு வருகை தாமதமாகும் என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
தூத்துக்குடியில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரையை ஏன் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இம் மாவட்டத்தில் 150 கி.மீ. கடல் பகுதி உள்ளது. இங்கு மணப்பாடு, முத்துநகர் கடற்கரை ஆகியவை சுற்றுலாத் தலங்களாக உள்ளன. இதனால் ஒவ்வொரு வாரமும் ஒரு கடற்கரை என தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே மணப்பாடு, முத்துநகர் கடற்கரை உள்ளிட்டவை தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் உள்ள ஊருணிகள், குளங்களை தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், அரசின் நெகிழி (பிளாஸ்டிக்) தடை குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த வாரம் இனிகோ நகரில் சுத்தப்படுத்தும் பணி நடைபெற உள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான ஆய்வுக் குழு இதுவரை வரவில்லை. ஆய்வுக்குழுத் தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி அகர்வாலுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வருகை குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார் அவர்.
தொடர்ந்து, தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் உள்ள வஉசி கடற்கரை பூங்காவில் இந்திய கடலோர காவல்படை தூத்துக்குடி பிரிவின் சார்பில், சனிக்கிழமை நடைபெற்ற சர்வதேச கடற்கரை தூய்மை தின நிகழ்ச்சியில் ஆட்சியர் கலந்து கொண்டு தூய்மைப் பணியை தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில், இந்திய கடலோர காவல்படை தூத்துக்குடி பிரிவு கட்டளை அதிகாரி எஸ்.பி. வெங்கடேஷ், துணை கட்டளை அதிகாரி மார்க்கண்டேயன் மிஷ்ரா, மனித உரிமைகள் அமைப்பு தேசியச் செயலர் ஹென்றி திபேன் மற்றும் பள்ளி, கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com