பெண்களுக்கு வேளாண் கருவிகள் பயிற்சி முகாம்

தூத்துக்குடியில் பெண்கள் வேளாண் கருவிகளை பயன்படுத்துவது குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் பெண்கள் வேளாண் கருவிகளை பயன்படுத்துவது குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மதுரை சமுதாயக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில், "பணிச்சூழலை மேம்படுத்துவதன் வாயிலாக பண்ணையில் பணி புரியும் பெண்களின் வேலைப்பளுவை மட்டுப்படுத்துதல்' எனும் திட்டத்தின்கீழ், பண்ணை மகளிருக்கு வேளாண் கருவிகளை இயக்குவது குறித்து பயிற்சி மற்றும் செயல்விளக்க முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, பண்ணை மகளிருக்கு மேம்படுத்தப்பட்ட கருவிகளின் செயல்விளக்க முகாம் தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகம், உடையார்குளம் கிராமத்தில் நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமை ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.
முகாமில், எளிய முறையில் பண்ணை மகளிருக்கு உதவுதல், பணிப்பளு குறைக்கும் உபகரணங்களான குனியாமல் நாற்று நடும் உபகரணம், விதையிடும் உபகரணம், கையுறையுடன் காய வைத்தல், மலர் பறிக்கும் உபகரணம் ஆகியவை குறித்து உதவிப் பேராசிரியர் ப. நல்லகுரும்பன் விளக்கம் அளித்தார்.
இந்த உபகரணங்கள் குறித்த விவரங்களை பேராசிரியர் மற்றும் தலைவர், குடும்பவள மேலாண்மை மற்றும் நுகர்வோர் அறிவியல் துறை, சமுதாய கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மதுரை-625104 என்ற முகவரியிலும், 0452-2424683 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com