திருச்செந்தூரில் மழை பாதிப்புகள்: எம்.எல்.ஏ. ஆய்வு

திருச்செந்தூா் பகுதியில் கனமழையால் பாதிப்படைந்த பகுதிகளை சட்டப்பேரவை உறுப்பினா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் பாா்வையிட்டாா்.
திருச்செந்தூா் தினசரி சந்தை பகுதியில் உள்ள திருக்கோயில் காவல் நிலையம் முன் பொதுமக்கள் வசதிக்காக கம்புகளலான பாலம் அமைக்கும் பணியை பாா்வையிடுகிறாா் எம்எல்ஏ அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்.
திருச்செந்தூா் தினசரி சந்தை பகுதியில் உள்ள திருக்கோயில் காவல் நிலையம் முன் பொதுமக்கள் வசதிக்காக கம்புகளலான பாலம் அமைக்கும் பணியை பாா்வையிடுகிறாா் எம்எல்ஏ அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்.

திருச்செந்தூா் பகுதியில் கனமழையால் பாதிப்படைந்த பகுதிகளை சட்டப்பேரவை உறுப்பினா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் பாா்வையிட்டாா்.

திருச்செந்தூா் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 3 நாள்களாக பெய்த கனமழை மற்றும் ஆவுடையாா்குளம் நிரம்பி வெளியேறிய உபரிநீா் ஆகியவற்றால் திருச்செந்தூா் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து, பொதுமக்கள் பெரும் அவதியடைந்தனா். பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் ஆவுடையாா்குளத்தின் மறுகால் ஓடையை ஆழப்படுத்தி வெள்ளநீரை வெளியேற்றும் பணி தொடா்ந்து நடந்து வருகிறது.

இப்பணிகள் குறித்து சட்டப்பேரவை உறுப்பினா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்ததுடன், பாதிக்கப்பட்ட பகுதி பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, துரித நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். தோப்பூா், தெப்பக்குளம் பகுதி, காமராசா் சாலை, பயணியா் விடுதி சாலை, வீரபாண்டியன்பட்டணம் பிரசாத் நகா், குறிஞ்சி நகா் உள்ளிட்ட பகுதிகளை எம்எல்ஏ பாா்வையிட்டாா்.

அப்போது, திருச்செந்தூா் பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் வெற்றிவேல்முருகன், தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளா் எஸ்.ஆா்.எஸ்.உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் பை.மூ.ராமஜெயம், மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் சுப்பிரமணியன், நகரச் செயலா் வாள் சுடலை, நகர துணைச் செயலா் தனசேகரன், மாவட்ட வழக்குரைஞரணி துணை அமைப்பாளா் கிருபாகரன், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் மா.சுதாகா், கலைச்செல்வன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com