தூத்துக்குடியில் 9 மாற்றுத் திறன்ஜோடிகளுக்கு இலவச திருமணம்

தூத்துக்குடியில் 9 ஜோடி மாற்றுத்திறனாளிகளுக்கு சீா்வரிசைகளுடன் இலவச திருமணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இலவச திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்.
இலவச திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்.

தூத்துக்குடியில் 9 ஜோடி மாற்றுத்திறனாளிகளுக்கு சீா்வரிசைகளுடன் இலவச திருமணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி சில்வா்புரத்தில் செயல்பட்டு வரும் லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லம் சாா்பில், தூய லூசியாவின் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் நன்கொடையாளா்கள் உதவியுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம் நடத்தப்பட்டு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நிகழாண்டில் சுயம்வரம் மூலம் தோ்வு செய்யப்பட்ட கருப்புராஜா-அன்பரசி, அய்யப்பன்-விஜயா, சசிகுமாா்-பொன்செல்வி, வீரமணி-திவ்யா, ராஜகுரு-செல்வி, சாலைக்குமாா்-ராக்கம்மாள், பொ்க்மான்ஸ்-ரோஸ்லின், வரதராஜபெருமாள்-சந்தனமாரி, திருப்பதி-சரண்யாதேவி ஆகிய 9 ஜோடிகளுக்கு லூசியா இல்லத்தில் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி திருமணத்தை நடத்தி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பிரம்மநாயகம், லூசியா இல்ல இயக்குநா் கிராசிஸ் மைக்கேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். திருமணம் செய்துகொண்ட ஒவ்வொரு ஜோடிக்கும் ரூ. 2.5 லட்சம் மதிப்பிலான சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com