காயாமொழியில் செல்வமகள் திட்டம் தொடக்கம்

பரமன்குறிச்சி அருகே காயாமொழியில்  பாஜக சார்பில்  செல்வமகள் திட்டத்தில் பயனாளிகளை சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பரமன்குறிச்சி அருகே காயாமொழியில்  பாஜக சார்பில்  செல்வமகள் திட்டத்தில் பயனாளிகளை சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மத்திய அரசு சார்பில் செல்வமகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பெண் குழுந்தைகளுக்கு பெற்றோர் மாதந்தோறும் அஞ்சலகத்தில் சேமிக்கும் நிதி அக்குழுந்தைகளின் திருமணம் மற்றும் உயர்கல்வி பயிலுவதற்கு கூடுதல் தொகையாக வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயனாளிகளை சேர்க்க பாஜக சார்பில் ரூ. 150 ம், பயனாளிகளிடம் இருந்து ரூ. 100 ம் பெற்று அதற்கான அட்டை வழங்கும் நிகழ்ச்சிக்கு பாஜக மாவட்டச் செயலர் இரா. சிவமுருகன்ஆதித்தன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் 100 பயனாளிகளுக்கு அதற்கான புத்தகம் வழங்கப்பட்டது. 
இதில், ஒன்றிய பாஜக தலைவர் கிருஷ்ணகுமார், மாவட்ட மகளிரணிச் செயலர் கு. நெல்லையம்மாள், மாவட்ட விவசாய பிரிவுச் செயலர் செந்தூர்பாண்டி, ஒன்றிய துணைத்தலைவர் தங்கேசஆதித்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com