சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயின்று டிஎஸ்பி பணிக்கு தேர்வான ஏழை மாணவி

தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயின்ற பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் காவல் துணைக் கண்காணிப்பாளர் பணிக்கு தேர்வானார்.


தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயின்ற பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் காவல் துணைக் கண்காணிப்பாளர் பணிக்கு தேர்வானார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வில், சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயின்ற 6 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கான நேர்காணலில், அனிதா துணை ஆட்சியர் பணியையும், எம். சரோஜா காவல் துணைக் கண்காணிப்பாளர் பணியையும், ஸ்ரீதேவி, சித்ராதேவி ஆகியோர் வணிக வரித்துறை உதவி ஆணையர் பதவியையும் தேர்வு செய்தனர். தேர்வு செய்யப்பட்ட நான்கு பேரையும், அகாதெமி நிறுவனர் சுகேஷ் சாமுவேல், தேர்வு ஒருங்கிணைப்பாளர் அந்தோணி பட்டுராஜ் ஆகியோர் பாராட்டினர். தேர்வான நான்கு பேரில் எம். சரோஜா மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இதுகுறித்து சரோஜா கூறியது: தந்தை முருகானந்தம் திரையரங்கில் ஊழியராகவும், தாய் பால்தாய் பீடி சுற்றும் தொழிலாளியாகவும் உள்ளனர்.  ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு அகாதெமியில் அளிக்கப்பட்ட நேர்காணல் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com