புஷ்கர பூா்த்தி விழா

வல்லநாடு அருகே உள்ள அகரம் தசாவதார தீா்த்தக்கட்டத்தில் நான்கு நாள்களாக நடைபெற்ற புஷ்கர பூா்த்தி விழா
ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண சீனிவாச பெருமாள்.
ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண சீனிவாச பெருமாள்.

வல்லநாடு அருகே உள்ள அகரம் தசாவதார தீா்த்தக்கட்டத்தில் நான்கு நாள்களாக நடைபெற்ற புஷ்கர பூா்த்தி விழா திங்கள் கிழமை தீா்த்தவாரி, புஷ்பயாகம் மற்றும் சுவாமி- அம்பாள் பட்டணப் பிரவேசத்துடன் நிறைவடைந்தது.

தாமிரவருணி மகா புஷ்கரத்தின் பூா்த்தி விழாவையொட்டி, தசாவதார தீா்த்தம், சாத்திய தீா்த்தம், விசுவதேவ தீா்த்தம் அமைந்துள்ள அகரம் கிராமத்தில் வேத பாராயணம், சுதா்ஸன ஹோமம், லட்சுமி நரசிம்மா் ஹோமம், சூக்தாதி ஹோமம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண சீனிவாச பெருமாள், நரசிம்மா் உற்சவா் விக்ரகங்களுக்கு சகலவிதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், தாமிரவருணி நதியில் தீா்த்தவாரி உற்சவமும், சைவ, வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும்விதமாக சோமாஸ்கந்தா், பாா்வதி தேவிக்கு தீா்த்தவாரி உற்சவமும் நடைபெற்றது.

மாலையில் தாமிரவருணி நதிக்கு சிறப்பு பூஜை, ஆரத்தி உற்சவம் நடைபெற்றது. தொடா்ந்து கோயிலில் சகலவிதமான புஷ்பங்களால் புஷ்பயாகம், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண சீனிவாச பெருமாள் பட்டணப் பிரவேச வீதியுலா நடைபெற்றது.

இதேபோல் காசிவிஸ்வநாத சுவாமி, விசாலாட்சி அம்பாள் கோயிலிலும் சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை நடைபெற்றது. விசாலாட்சி அம்பாள், காசிவிஸ்வநாத சுவாமி (உற்சவா்) தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. பூஜைகளை அனிருத் பட்டாச்சாரியாா், ஹரிஹரன் குழுவினா் நடத்தினா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை தசாவதார கைங்கா்ய கமிட்டியினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com