50 மாதிரி வாக்குகள் பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியர் அறிவுரை

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் வாக்குப்பதிவுக்கு முன்பு 50 மாதிரி வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்றார் ஆட்சியர் சந்தீப் நந்தூரி.


தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் வாக்குப்பதிவுக்கு முன்பு 50 மாதிரி வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்றார் ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி மற்றும் விளாத்திகுளம் பேரவைத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் தேர்தல் அலுவலர்களுக்கான 3ஆவது கட்ட பயிற்சி முகாமை சனிக்கிழமை தொடங்கிவைத்து அவர் பேசியது: தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 37 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களின் முகவர்கள் வாக்குப் பதிவு நாளில் வாக்குச் சாவடியில் இருப்பார்கள். அதற்கு தேவையான இடவசதி செய்யப்பட்டுள்ளதா?  வாக்குச் சாவடி மையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். வாக்குப்பதிவு நாளில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக குறைந்தபட்சம் 50 மாதிரி வாக்குகள் பதிவு செய்ய வேண்டும். பின்னர், மாதிரி வாக்குப்பதிவுகளை தவறாமல் அழிக்க வேண்டும்.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏதேனும் பழுதுகள் ஏற்பட்டால் முழு இயந்திரத்தையும் மாற்றி மாதிரி வாக்குப்பதிவுகளை பதிவு செய்து பின்னர் அழிக்க வேண்டும். வாக்காளர் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் பழுதுகள் ஏற்பட்டால் இயந்திரத்தை மாற்ற வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து, பயிற்சி வகுப்பின்போது நடைபெற்ற அஞ்சல் வாக்கு சீட்டு வழங்கும் பணிகளை பார்வையிட்டு, தேர்தல் பணி சான்று பெறாதவர்கள் முழுமையாக பெற்றுச் செல்ல தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். 
நிகழ்ச்சியல்,  விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பொது பார்வையாளர் கே. மாதவி லதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா,  கோவில்பட்டி கோட்டாட்சியர் அமுதா, விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிசந்திரன், வட்டாட்சியர்கள் வதனாள் (எட்டயபுரம்), ராஜ்குமார் (விளாத்திகுளம்), லிங்கராஜ் (கயத்தாறு), பரமசிவம் (கோவில்பட்டி) மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.  
கோவில்பட்டி: கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 281 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடி தலைமை அலுவலர், அலுவலர்கள் நிலை 1, 2, 3 மற்றும் 4 அலுவலர்களுக்கான 3ஆம் கட்டப் பயிற்சி முகாமில் 1, 442 பேர் கலந்துகொண்டனர்.
நாடார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமுக்கு, கோட்டாட்சியர் அமுதா தலைமை வகித்தார். வட்டாட்சியர்கள் பரமசிவன் (கோவில்பட்டி), லிங்கராஜ் (கயத்தாறு), நகராட்சி ஆணையர் அச்சையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர்கள் சரவணப்பெருமாள் (கோவில்பட்டி), மாடசாமி (கயத்தாறு), துணை வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com