தேர்தல் பாதுகாப்புப் பணி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணி மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் வாகனங்களில்

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணி மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார்.
வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி மற்றும் காவல் துறை வயர்லெஸ் கருவி பொருத்தும் பணிகள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தேர்தல் பொது பார்வையாளர் சீமா சர்மா ஜெயன், காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பிறகு, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் கூறியது:
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான வாக்குச்சாவடிகளுக்கு கருவிகள் உள்ளிட்ட பொருள்களை கொண்டு செல்லவும், வாக்குப்பதிவு முடிந்தவுடன் எடுத்துவரும் வகையிலும் 130 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 25 வாகனங்கள், தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு 21 வாகனங்கள், திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 21 வாகனங்களில் பொருள்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
இதேபோல, ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 21 வாகனங்கள், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 20 வாகனங்கள், கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு 25 வாகனங்கள் என மொத்தம் 130 வாகனங்கள், 5 ரிசர்வ் வாகனங்கள் ஆகியவற்றில் ஜிபிஎஸ் கருவி மற்றும் காவல் துறை வயர்லெஸ் மைக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com