நாளை மக்களவைத் தேர்தல்: தயார் நிலையில் தூத்துக்குடி தொகுதி

மக்களவைத் தேர்தல் வியாழக்கிழமை (ஏப்.18) நடைபெறுவதையொட்டி தூத்துக்குடி தொகுதியில்

மக்களவைத் தேர்தல் வியாழக்கிழமை (ஏப்.18) நடைபெறுவதையொட்டி தூத்துக்குடி தொகுதியில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன், திமுக வேட்பாளர் கனிமொழி, அமமுக வேட்பாளர் ம. புவனேஸ்வரன் உள்ளிட்ட 37 பேர் போட்டியிடுகின்றனர்.  இதேபோல, விளாத்திக்குளம் பேரவைத் தொகுதியில் 14 பேர் போட்டியிடுகின்றனர்.
 தேர்தலில் போட்டியிடுவோரின் பிரசாரம் முடிந்த நிலையில் , மாவட்டம் முழுவதும் வாக்காளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தவிர தொகுதிக்கு தொடர்பு இல்லாதவர்கள் உடனடியாக வெளியேறிவிட்டார்களா? என கண்காணிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.  இதேபோல, மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடி சீட்டு விநியோகம் 90 சதவிகிதம் முடிவடைந்துவிட்டது. தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் உள்ள 1,595 வாக்குச்சாவடிகளில் 236 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும், 3 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானதாகவும் கண்டறியப்பட்டுள்ளதால் அங்கு உள்ளூர் போலீஸாரோடு துணை ராணுவத்தினர் என தொகுதி முழுவதும் மொத்தம் 4 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 பொதுமக்கள் எந்தவித அச்சமுமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும், வாக்குச்சாவடி அலுவலர்களாக 8,487 பேர் ஈடுபடுகின்றனர் என்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
விளாத்திகுளம் தொகுதியில் 4 இயந்திரங்கள்:  தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 
இதேபோல, இடைத்தேர்தல் நடைபெறும் விளாத்திகுளம் பேரவைத் தொகுதியில் 4 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. அந்த தொகுதிக்குள்பட்ட 259 வாக்குச்சாவடிகளில் 5 தேர்தல் நிலை அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இதற்காக, மாவட்டத்தில் மொத்தம் 6,084 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 2,652 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 2,957 வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com