விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 13 பேர் கைது
By DIN | Published On : 21st April 2019 01:25 AM | Last Updated : 21st April 2019 01:25 AM | அ+அ அ- |

திருச்செந்தூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் நிகழ்ந்த தாக்குதலைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மேல திருச்செந்தூர் ஊராட்சிக்குள்பட்ட கீழநாலுமூலைக்கிணறு பிரதான சாலையில் சனிக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
தெற்கு மாவட்டச் செயலர் முரசு தமிழப்பன் தலைமை வகித்தார். மக்களவைத் தொகுதிச் செயலர் ராஜ்குமார், சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட அமைப்பாளர் மு.தமிழ்பரிதி, தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் தமிழ்மாறன், உடன்குடி ஒன்றியச் செயலர் தமிழ்வாணன், ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதிச் செயலர் திருவள்ளுவன், ஒன்றியச் செயலர் ராஜ்வளவன் உள்பட மறியலில் ஈடுபட்ட 13 பேரை திருச்செந்தூர் தாலுகா போலீஸார் கைது செய்தனர்.