பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத் திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. ஆய்வு
By DIN | Published On : 26th April 2019 01:14 AM | Last Updated : 26th April 2019 01:14 AM | அ+அ அ- |

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள பாஞ்சாலங்குறிச்சி மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் குலதெய்வம் அருள்மிகு வீரசக்கதேவி ஆலயத் திருவிழா மே 10 ஆம் தேதி தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, ஓட்டப்பிடாரம் காவல்நிலையத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். ஆய்வின்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்ராமு, துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், ஆய்வாளர்கள் பாலமுருகன், சிவலிங்க சேகர், ஞானராஜ் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் உடனிருந்தனர்.