கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத் திருவிழா கொடியேற்றம்
By DIN | Published On : 27th April 2019 08:01 AM | Last Updated : 27th April 2019 08:01 AM | அ+அ அ- |

கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாள்கள் திருவிழா நடைபெறும்.
இதையொட்டி, புனித சூசையப்பர் ஆலய வளாகத்தில் உள்ள பங்குதந்தையர் இல்லத்திலிருந்து கொடிகள் அணிவகுத்து கொண்டுவரப்பட்டன. பின்னர், பாளை. மறை மாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேராயர் அந்தோணிபாப்புசாமி, கொடிகளை அர்ச்சித்து ஆலயம் முன்பு புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் ஏற்றினார்.
தொடர்ந்து, ஆலயப் பங்குத்தந்தை அலோசியஸ்துரைராஜுடன் இணைந்து சமாதானப் புறாவை பறக்கவிட்டதும், திருப்பலி நிறைவேற்றப்பட்டது. புனித அந்தோணியார் ஆலயப் பங்குத்தந்தை இம்மானுவேலும் பங்குகொண்டார். திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
விழா நாள்களில் தினமும் நற்செய்தி பெருவிழா, நற்கருணை ஆசீர் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். 9ஆம் திருநாளில் (மே 4) மாலை 6.30 மணிக்கு உணவுத் திருவிழா, 10ஆம் திருநாளில்(மே 5) காலை 8 மணிக்கு ஆலயத்தில் திருவிழா திருப்பலி நடைபெறும். மாலை 6 மணிக்கு ஜான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நன்றி திருப்பலியும், தொடர்ந்து, பள்ளி வளாகத்திலிருந்து ஆலயத்துக்கு முக்கிய வீதிகள் வழியாக நற்கருணை பவனியும் நடைபெறும்.
ஏற்பாடுகளை ஆலயப் பங்குதந்தை, உதவி பங்குதந்தை மிக்கேல் மற்றும் அருள்சகோதரிகள், பங்குப் பேரவையினர், அன்பியத்தினர், பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.