உடன்குடி, திருச்செந்தூர் பகுதியில் மழை

உடன்குடி பகுதியில் சனிக்கிழமை இரவு பெய்த மழையால் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

உடன்குடி பகுதியில் சனிக்கிழமை இரவு பெய்த மழையால் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது.
தூத்துக்குடி மாவட்டத்தில்  உடன்குடி உள்ளிட்ட பகுதியில் சில வாரங்களாக வெப்பம் கடுமையாக இருந்து வருகிறது.
வெப்பம் காரணமாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். மழை பெய்ய வேண்டி உடன்குடி பகுதியில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில், கந்தபுரம் சுடலைமாட சுவாமி கோயில், சாய்ராம் ஆலயம், நங்கைமொழி  காளத்தீஸ்வரர் கோயில், கண்டுகொண்ட விநாயகர் கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜை, வழிபாடுகள், பெண்கள் பங்கேற்ற சுமங்கலி பூஜை மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை ஆகியவை நடைபெற்றன.
மேலும், காரைக்கால் அம்மையார் கோயிலில் மழை வேண்டி மழை பதிகம் பாடப்பட்டது. இதையொட்டி உடன்குடி பகுதியில் பெய்த மழையால் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து  ஓடியது. மேலும், வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது.
திருச்செந்தூர்: திருச்செந்தூர் பகுதியில் சனிக்கிழமை இரவு பெய்த  மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. ஞாயிற்றுக்கிழமை பகலிலும் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டதால் பொதுமக்களும், பக்தர்களும் மகிழ்ச்சியடைந்தனர். 
திருச்செந்தூர் அருகே கீழநாலுமூலைக்கிணறு, நடுநாலுமூலைக்கிணறு, நா.முத்தையாபுரம் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com