காயல்பட்டினம் பகுதியில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை

காயல்பட்டினம் பகுதிகளில் பேரிடர் மேலாண்மை குறித்து ஒத்திகை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காயல்பட்டினம் பகுதிகளில் பேரிடர் மேலாண்மை குறித்து ஒத்திகை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புயல் மற்றும் வெள்ளம் ஏற்படும்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பான பேரிடர் மேலாண்மை உதவி மற்றும் பேரழிவு நிவாரண ஒத்திகை நிகழ்ச்சி ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில் காயல்பட்டினத்தில் நடைபெற்றது. பின்னர், எல்.கே.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் நிகழ்த்திய  பேரிடர் கால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியை ஆட்சியர் பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து ஆட்சியர் கூறியது:  தமிழக அரசின் உத்தரவின்பேரில் கடற்கரை கிராமங்களில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. புயல், வெள்ளம் ஏற்பட்டால் பாதிப்புகள் எவ்வாறு இருக்கும், அப்போது அரசு அதிகாரிகள் பொதுமக்களை பாதிப்பிலிருந்து மீட்டு உதவி செய்வது, பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளுக்கு தேவையான சாதனங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை
ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற ஒத்திகை நிகழ்த்தப்பட்டது என்றார் அவர்.
இதில், சுகாதாரத் துறை துணை இயக்குநர் கீதாராணி, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் சத்தியநாராயணன், மீன்வளத் துறை உதவி இயக்குநர் பாலசரஸ்வதி, கோட்டாட்சியர் தனப்பிரியா, வட்டாட்சியர் தில்லைபாண்டி, வருவாய் ஆய்வாளர் பொற்செல்வி, வட்டார போக்குவரத்து  அலுவலர் சக்திவேல், தீயணைப்பு நிலைய அலுவலர்  நட்டார் ஆனந்தி, நகராட்சி ஆணையர் புஷ்பலதா, சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜன், ஸ்ரீசத்தியசாய் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், மாவட்டத் தலைவர் செந்தில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com