ஸ்ரீவைகுண்டம் அருகே மாட்டுவண்டி போட்டி: மறுகால்குறிச்சி வண்டி முதலிடம்

ஸ்ரீவைகுண்டம் அருகே  கால்வாய் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாட்டுவண்டி போட்டியில்  மறுகால்குறிச்சி வண்டி  முதல் பரிசை தட்டிச் சென்றது. 

ஸ்ரீவைகுண்டம் அருகே  கால்வாய் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாட்டுவண்டி போட்டியில்  மறுகால்குறிச்சி வண்டி  முதல் பரிசை தட்டிச் சென்றது. 
கால்வாய் அருள்மிகு  உலகு முத்தாரம்மன் கோயில் கொடைவிழாவை முன்னிட்டு பெரிய, சிறிய மாட்டு வண்டி போட்டிகள்   நடைபெற்றது. 
பெரிய மாட்டுவண்டிபோட்டியை  ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சந்திரன் தொடங்கிவைத்தார்.  சிறிய மாட்டுவண்டி போட்டியை  செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர்  ரெகுராஜன் தொடங்கிவைத்தார்.  
கால்வாய் அரசுப் பள்ளியில் இருந்து வல்லகுளம் , தெற்கு காரசேரி வழியாக  தாதன்குளம் ரயில்வே கேட் எல்லையாக குறிக்கப்பட்டிருந்தது. 
12 வண்டிகள் கலந்துகொண்ட பெரிய மாட்டுவண்டி போட்டியில் முதல் கொடியையும், முதல் மற்றும் இரண்டாம் பரிசை  மறுகால் குறிச்சி சுப்பம்மாள்  மாட்டுவண்டியும்,  மூன்றாவது பரிசை சங்கரபேரி மாட்டுவண்டியும் தட்டிச் சென்றது.  
முதல் பரிசான ரூ.31ஆயிரத்தை ராமையாவும், இரண்டவது பரிசான ரூ. 25 ஆயிரத்தை சிவனும், மூன்றாவது பரிசான ரூ. 17 ஆயிரத்தை ஈஸ்வரனும் வழங்கினர். 
சின்ன மாட்டுவண்டி போட்டியில், முதல் பரிசை, முதல் கொடியையும் மறுகால் குறிச்சி வண்டியும்,  இரண்டாவது பரிசை கால்வாய் முத்துராமலிங்கம் வண்டியும்,  மூன்றாவது பரிசை மேட்டூர் முத்தம்மாள் வண்டியும் தட்டிச் சென்றன. 
இப்போட்டியில் முதல் பரிசான ரூ.21ஆயிரத்தை ராமசந்திரனும்,  இரண்டாம் பரிசான ரூ. 15 ஆயிரத்தை தெய்வக்கண்ணனும்,  மூன்றாம் பரிசான ரூ. 11ஆயிரத்தை ஆச்சிமுத்துவும் வழங்கினர். நிகழ்ச்சியை கால்வாய் சிவா தொகுத்து வழங்கினார்.
ஏற்பாடுகளை ரேக்லா ரேஸ் கமிட்டியார்கள் பொன்ராஜ், சிவனு, சேது என்ற சேதுராமலிங்கம், முருகையாபாண்டியன் உள்பட முத்து ஸ்டார் கமிட்டியினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com