புதூரில் கிருஷ்ண ஜெயந்தி விழா

புதூர் ஸ்ரீகிருஷ்ணா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி , ஸ்ரீஅத்வைனந்தா வேதாந்த மடம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.

புதூர் ஸ்ரீகிருஷ்ணா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி , ஸ்ரீஅத்வைனந்தா வேதாந்த மடம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.
விழாவுக்கு,  பள்ளித் தாளாளர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார்.  பள்ளி நிர்வாக அலுவலர் பாலமுரளி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் பா. சுபா வரவேற்றார். அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
தொடர்ந்து மாணவர், மாணவிகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து நடனமாடினர்.  உறியடி, இசை, நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  கிருஷ்ணரின் அவதாரங்கள் குறித்து மாணவர், மாணவிகளுக்கு பள்ளித் தளாளர் தமிழ்ச்செல்வி எடுத்துரைத்தார். ஆசிரியர் பானுமதி நன்றி கூறினார். 
ஸ்ரீஅத்வைனந்தா வேதாந்த மடம் சார்பில் அத்வைனந்தா சுவாமிகள் தலைமையில் கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் நடைபெற்றது.  ஊர்வலம் ஆனந்த விநாயகர் கோயில், சுப்பிரமணியசுவாமி கோயில், செளடாம்பிகை அம்மன் கோயில், பேருந்து நிலையம் வழியாக மடத்தில் நிறைவடைந்தது. இதில் சின்னஞ்சிறு குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு கிருஷ்ணரின் பாடல்களை பாடியபடி ஊர்வலமாகச்  சென்றனர். பின்னர் கிருஷ்ணர், ராதைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com