காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு: தூத்துக்குடியில் எஸ்.பி. ஆலோசனை

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 25) நடைபெறும் காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள்


தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 25) நடைபெறும் காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் தேர்வு மையங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிகள் குறித்து எஸ்.பி. ஆலோசனை வழங்கினார். 
2019 ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் ஆகிய பணிகளுக்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 25) நடைபெறுகிறது. தூத்துக்குடியில் 8 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வில் 9,599 பங்கேற்க அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தேர்வு மையக் கண்காணிப்பில் 8 காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள், 31 காவல் ஆய்வாளர்கள், 116 உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 635 தலைமை காவலர்கள் மற்றும் காவலர்கள், 53 காவல்துறை அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் என மொத்தம்  காவல்துறையினர் 843 பேர் ஈடுபடுத்தப்படுத்தப்பட உள்ளனர்.
இதனிடையே, தேர்வு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் பேசியது: 
தேர்வு எழுதுவோர் இணையதளத்தில் இருந்து நுழைவுச்சீட்டு எடுத்த நகலை கொண்டு வருகின்றனரா என்பதை தவறாமல் கண்காணிக்க  வேண்டும். தேர்வு மையத்துக்கு காலை 9 மணிக்கு மேல் காலதாமதமாக வரும் விண்ணப்பதாரர்களை தேர்வு மையத்துக்குள் அனுமதிக்க கூடாது எனக் குறிப்பிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com