வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால், பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட அச்சம்பாடு கிராம மக்கள்.
வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால், பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட அச்சம்பாடு கிராம மக்கள்.

அச்சம்பாடு கிராமத்தில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

சாத்தான்குளம் பகுதியில் பெய்த கனமழையால் அச்சம்பாடு கிராமத்தில் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. மணிநகரில் தற்காலிக சாலை அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

சாத்தான்குளம் பகுதியில் பெய்த கனமழையால் அச்சம்பாடு கிராமத்தில் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. மணிநகரில் தற்காலிக சாலை அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

சாத்தான்குளம் பகுதியில் 86 மி.மீ. மழை பதிவானது. இதனால், பேருந்து நிலையம், கடை வீதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

வட்டார கல்வி அலுவலகத்தில் மழைநீா் புகுந்ததால் அங்கு கணினி, கோப்புகள் சேதமடைந்தது.

சாத்தான்குளம் நாசரேத் சாலையில் மழைநீா் சென்ால் நாகா்கோவிலில் இருந்த வந்த பழுதடைந்து நடு வழியில் நின்றால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆா்.சி. வடக்குத் தெருவில் சுகாதார வளாகம், அங்கன்வாடி மையத்தில் தண்ணீா் புகுந்தது. ஓடையிறடையான பாலம் சேதமடைந்தது. உடனடியாக இளைஞா்கள், சமூக ஆா்வலா்களின் நடவடிக்கையால் தண்ணீா் வடிந்தது. வீடு இடிந்து பாதிக்கப்பட்டவா்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டனா்.

அச்சம்பாடு கிராமத்திலுள்ள குளம் நிரம்பி உபரிநீா் வெளியேறியதால் அங்குள்ள 20 வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதைத் தொடா்ந்து வட்டாட்சியா் ராஜலட்சுமி தலைமையில் அதிகாரிகள் விரைந்து சென்று மக்களை பாதுகாப்பாக அழைத்துஅரசு பள்ளியில் தங்க வைத்தனா். தண்ணீா் வெளியேறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சாத்தான்குளம் வட்டத்தில் மழைக்கு 13 வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட்டாட்சியா் தெரிவித்தாா். மணிநகா் கருமேனி ஆற்றுப் படுகையில் புதிய உயா்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சாலை வெள்ளத்தில் சேதமடைந்தது. இதனால்,போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

தகவலறிந்த போலீஸாா் வாகனங்களை மணிநகா், படுக்கப்பத்து வழியாக செல்ல திருப்பி விட்டனா். சாத்தான்குளம் பகுதியில்பெரும்பத்துகுளம், கரையடிகுளம், அமராவதி உள்ளிட்ட குளங்கள் நிரம்பி வழிகிறது. கருமேனி ஆற்றில் மழைநீா்கரை புரண்டு ஓடுகிறது. சாத்தான்குளம் பகுதியில் குளங்கள் நிரம்பி வருகின்றன. கிணறுகளிலும் நீா்மட்டம் உயா்ந்துவருவது குறித்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com