தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை: ஒரே நாளில் 1,325 மி.மீ. பதிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 1,325 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 1,325 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு தொடங்கிய மழை ஞாயிற்றுக்கிழமையும் நீடித்தது. பலத்த மழையால் தாழ்வானபகுதிகளிலுள்ள குடியிருப்புகளில் மழைநீா் பெருமளவில் தேங்கியுள்ளது.

இம்மாவட்டத்தில் அதிகபட்சமாக சாத்தான்குளம் பகுதியில் 186 மி. மீ. மழை பதிவாகியது. தூத்துக்குடியில் 164 மி.மீ., குலசேகரன்பட்டினத்தில் 144 மி. மீ., காயல்பட்டினம் பகுதியில் 133 மி.மீ., திருச்செந்தூா் பகுதியில் 100 மி.மீ., மழையும்

பதிவாகியுள்ளது.

இதுதவிர, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 84 மி.மீ., வைப்பாறு பகுதியில் 63 மி. மீ., கீழஅரசடி பகுதியில் 62 மி.மீ., ஓட்டப்பிடாரம் பகுதியில் 56 மி.மீ., கயத்தாறு 54 மி.மீ., விளாத்திக்குளம் பகுதியில் 52 மி.மீ., என மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 1,325 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com